திருப்பூர்ல ஒரு நிகழ்ச்சிக்கு போக வேண்டியிருந்தது. ராத்திரி 10 மணிக்கு வால்வோ பஸ் புக் பண்ணியிருந்தேன். என்னோட சென்னையில் இருந்து முத்துக்குமார்னு ஒரு தம்பி வர்றான். அவன் பாண்டிச்சேரிக்கு வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து அவினாசி போய் அப்புறம் திருப்பூர் செல்ல திட்டமிட்டு இருந்தோம். சுமார் 7 மணிக்கே வீட்டை விட்டு பெட்டியுடன் கிளம்பி விட்டேன். வீட்டு வாசலுக்கு வந்து இளங்கோ அண்ணன் என்னை பஸ் ஸ்டாண்டுக்கு ஏற்றிச் சென்று விட வந்தார். திருச்சியில் இருந்து இங்கு வந்து தங்கி வேலை பார்ப்பவர் இளங்கோ அண்ணன். நண்பர் தான் என்றாலும் வயதில் பெரியவர் என்பதால் அண்ணன் என்று கூப்பிடுவோம். கருகருன்னு சொறிமுத்து அய்யனார் சிலை போல இருப்பார். அதே மீசை. அதே கண்கள்.
சில நேரம் ‘யோவ்...ஏட்டய்யா..’ என்று அவரைச் செல்லமாக கூப்பிடுவோம். எங்க வீட்டில் இருந்து நடந்து செல்லும் து£ரத்திலேயே இளங்கோ அண்ணனின் வீடு இருந்தது. ஒரு நண்பரின் வீட்டு மாடியில் தனிக்குடித்தனம் செய்துக் கொண்டிருந்தார்.
மணி ஒன்பதரை ஆயிடுச்சி. என்னோட செல்போன் அடிச்சது. எடுத்தேன். லைனில் முத்து இருந்தான்.
“ஹலோ..! என்ன முத்து எங்கடா இருக்க?”
“அண்ணே.. நா பஸ் டேண்டுல தான் இருக்கேன். எதிர்த்தாப்பல இருக்குற ஓட்டல் வாசல்ல வெயிட் பண்றேன்.”
“ஓகே முத்து. ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்”- என்றுச் சொல்லி செல்போனை கட் செய்து விட்டு, இளங்கோ அண்ணன் பல்சரில் உட்கார்ந்து கொண்டேன். பெட்டியை தொடையில் வைத்துக் கொண்டேன். ரொம்ப கணமாக இருந்தது. ஆனா வலி தெரியல.
அஞ்சு நிமிஷத்துல பஸ் ஸ்டாண்டுக்கு போயிட்டோம். முத்து ஓடி வந்து கை கொடுத்தான்.
“என்ன முத்து சாப்பிட்டியா?” ன்னு கேட்டேன்.
“இல்லண்ணே...”
“எதாவது பீர் சாப்பிடறியா?”
“...ம். நீங்க கம்பெனி குடுத்தா சாப்பிடறன்”-னு சொன்னான்.
பக்கத்தில் இருந்த ஒயின்சுக்கு சென்றோம். கிங்பிஷர் டின் பீர் ரெண்டு வாங்கினோம். மடக் மடக்கென குடித்து விட்டு டின்களை நசுக்கி போட்டு விட்டு வெளியே வந்தோம். பஸ் புறப்பட 10 நிமிஷம் மட்டுமே இருந்தது. காலத்தின் அவசரம் கருதி சுருக்கமாக முடித்துக் கொண்டோம். எனக்கு து£க்கம் வர்ற மாதிரி இருந்தது. பக்கத்து ஓட்டலுக்குச் சென்று ஆளுக்கு இரண்டு பரோட்டா பார்சல் கட்டிக் கொண்டோம். இளங்கோ அண்ணன் ரெண்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து கையசைத்து விட்டு கிளம்பி விட்டார்.
பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தோம். நான் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தேன். எனக்கு பக்கத்தில் முத்து. எங்கள் சீட்டுக்கு முன் கல்லு£ரி மாணவ, மாணவிகளைப் போன்ற தோற்றம் கொண்ட ரெண்டு பையன், ரெண்டு பெண்கள். நால்வருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் பேசுவதில் இருந்தும், அந்த பெண்களை பார்த்ததில் இருந்தும் தெரிய வந்தது. அவர்கள் ஆணும் பெண்ணுமாக மாறி, மாறி ஜோடிகளாக பிரிந்து உட்கார்ந்தார்கள். புதுச்சேரியில் உள்ள நர்சிங் கல்லு£ரியில் படிப்பவர்களாக இருக்கக்கூடும். தங்கள் சொந்த ஊருக்கு விடுமுறைக்காக செல்கின்றனர். கோயம்புத்து£ரில் இருந்து அவர்கள் பாலக்காட்டிற்கோ, திருச்சூருக்கோ செல்ல இந்த பஸ்ஸில் எங்களோடு பயணிக்கிறார்கள் எனத் தெரிந்தது.
பஸ் புறப்பட்டு சில நிமிடங்களில் பரோட்டா பொட்டலங்களை பிரித்து இருவரும் சாப்பிட்டோம். ஜன்னலைத் திறந்து கையை கழுவி, தண்ணீர் குடித்து முடித்தோம். குளிர் அதிகமாக இருந்தது. கைகளை கட்டிக் கொண்டு சீட்டில் சாய்ந்து து£ங்குவதற்கு முயற்சி செய்தேன். முத்து பேச ஆரம்பித்தான்.
“அண்ணே... அங்கிட்டு பாருங்கண்ணே. இப்படி சின்ன பசங்களா இருக்காங்க.. அந்த பொண்ணுங்க.. பசங்க தோள் மேல சாஞ்சி படுத்துகிட்டு வராங்க. பாருங்க..”
“அதுக்கு என்ன இப்போ”
“இல்ல.. காதல்ன்னு ஆரம்பிச்சா உடனே இப்படி நெருங்கி பழக தோணுமாண்ணே..”.
“இதெல்லாம் எங்கிட்ட ஏண்டா கேக்குற?. அந்த பொண்ணுங்களையே பாத்து கேளு”
“ஒரு சந்தேகம் தான்....”
“சும்மா கம்முன்னு படுத்து து£ங்குப்பா..”- என்றுச் சொல்லி கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டேன்.
சுமார் இரண்டு மணிநேரம் கண் அயர்ந்திருப்பேன். திடீரென முழிப்பு வந்தது. கண்ணை விழித்து திரும்பினேன். முத்துவின் கையில் இருந்த செல்போன் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. அவன் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான்.
“செல்போன்ல என்னடா பண்றே?. இந்த நேரத்துல...”
“மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்ணே..”
“யாருக்கு?”
“பிரண்டுக்கு தான்ணே.”
“பாய் பிரண்டா? கேர்ள் பிரண்டா?”
“கேர்ள் பிரண்டு தான்ணே.” வழிந்துக் கொண்டே சொன்னான். இருட்டில் அவன் முகத்தை பார்த்தேன். பிரகாசமாக இருந்தது.
“என்னடா வேலையெல்லாம் இது?”
“சும்மா தான்ணே...”
“இப்போ மணி என்ன ஆச்சி?”
“பணிரெண்டரை ஆகுதுன்ணே”- முத்து செல்போனை பார்த்து மணியைச் சொன்னான்.
“இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா?”- என்று கேட்டு விட்டு கண்ணை மூடி திரும்பவும் து£ங்க முயற்சி செய்தேன். து£க்கம் வரவில்லை.
தண்ணீர் பாட்டிலைத் திறந்து கொஞ்சம் குடித்தேன். முத்து தொடர்ந்து செல்போனில் இயங்கிக் கொண்டிருந்தான். என்ன தான் செய்கிறான்? என்று அவன் செல்போனை உற்று பார்த்தேன். அப்போது அவனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதை அவன் திறந்து படித்து விட்டு, பதில் செய்தி ஒன்றை டைப் செய்து அனுப்பினான்.
‘ஐயம் இன் பஸ்’-. முத்துவின் விரல்கள் செல்போன் கீ போர்டில் வி¬ளாடியதை அப்போது பார்க்க முடிந்தது. அடுத்த நிமிடமே, அவன் அனுப்பிய செய்திக்கு பதில் வந்தது. ‘யூ ஆர் இன் மை ரூம்’.
“என்ன முத்து இதெல்லாம்?”.
“சும்மாண்ணே”
“எதற்கெடுத்தாலும் சும்மான்னா என்னடா. லவ் பண்றியா?”
“இல்லன்ணே சும்மா தான் பிரண்ஸிப்.”
“இந்த மாதிரி மெசெஜ் அதுவும் இந்த நேரத்துல வருது. கேட்டா சும்மான்னு சொல்லுற?”
“இப்ப தான்னே அந்த பொண்ணுக்கு டைம் கிடைக்கும்”. சிரித்துக் கொண்டே மழுப்பலாக சொன்னான்.
“என்னவோ போடா”- என்றுச் சொல்லிக் கொண்டே காலைத்து£க்கி ஜன்னலின் ஓரத்தில் வைத்து மீண்டும் கண்ணை மூடினேன். து£க்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டிருந்தேன். அப்போது, மயிலிறகால் யாரோ காலை வருடுவது போல் உணர்வு எழுந்தது. எனக்குள் ஏதோ நிகழ்ந்தது. கண்ணை விழித்து பார்த்தேன். அப்போது எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணின் கூந்தல் என் கால்களை வருடிக் கொண்டிருந்தது தெரிந்தது. விருட்டென கால்களை எடுத்து விட்டு முத்துவை பார்த்தேன். அவன் செல்போனும் கையுமாக இருந்தான்.
“இன்னும் முடியலையா?” என்று கேட்டேன். வழக்கமான சிரிப்புடன் தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடா மெசெஜ் பண்றே?. ஒரு கவிதை எதாவது அனுப்பக் கூடாதா?”
“நீங்க ஒரு கவிதை சொல்லுங்க அடிச்சி அனுப்புறேன்.”
ம்.. கொஞ்சம் யோசித்தேன். நட்பு குறித்து கவிஞர் அறிவுமதி எழுதிய கவிதை வரிகள் ஒன்று எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘அடிவானத்தின் அழகு என்பது இரு சின்னஞ்சிறிய இதயங்களின் நட்பில் தான் உள்ளது’. இந்த வரிகளை முத்துவிடம் சொன்னேன். ஜெட் வேகத்தில் அதை ஆங்கிலத்திலேயே டைப் செய்து அனுப்பினான். பதிலுக்காக இருவரும் காத்திருந்தோம். ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து பதில் வந்தது. ‘ஏய் லு£சு என்னடா இது உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா.’
“என்னன்ணே பதில் இப்படி வந்திருக்கிறது!” என்று கோபம் கலந்த ஆச்சர்யத்துடன் கேள்வி கேட்டான் முத்து.
“இது கவிதை என்று டைப் செய்து அனுப்பு”- என்றேன். அப்படியே செய்தான். உடனே பதில் வந்தது. ‘ஒண்ணுமே புரியலடா’- என்று அதில் இருந்தது. முத்து ஒரு விதமாக என்னை பார்த்து முறைத்தான்.
நானும் இனிமேல் இந்த மெசெஜ் விஷயத்தில் நாம் தலையிடக் கூடாது என்று நினைத்து சீட்டில் சாய்ந்து து£ங்கத் தொடங்கினேன்.
விடியற்காலை ஈரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் முன்பாக வண்டி நின்றது. ஏதோ லக்கேஜ் இறக்கத் தொடங்கினார்கள். சிலர் வண்டியில் இருந்து இறங்கினர். நாங்களும் இறங்கினோம். நாங்கள் டீ கடை நோக்கி சென்றோம்.
“அண்ணே.. நீங்க ராத்திரி நல்லா து£ங்கிட்டீங்க. நான் தான் து£ங்கல”.
“ஏன் முத்து து£ங்க வேண்டியது தானே?”.
“எங்கண்ணே து£க்கம் வந்துச்சி..!”.
“ஏன்?”
“எங்கண்ணே து£ங்க விட்டாங்க.. எதிர் சீட்டில இருந்த பார்ட்டிங்க பண்ண லு£ட்டி இருக்கே...!”
“என்ன பண்ணாங்க?”.
“எல்லமே பண்ணாங்கண்ணே. ஆ... ஊ..ன்னு சத்தம் வேற கேட்டுக்கிட்டு இருந்துச்சி”.
“நெஜமாவா சொல்ற?”
“சத்தியமான்னே”.
முத்து சொன்னதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அப்போது பஸ் டிரைவர் விசில் அடிக்கும் சப்தம் கேட்டது. உடனே பஸ்சுக்குள் ஏறினோம். எங்கள் இருக்கைக்கு செல்லும் முன்பாக முன்சீட்டை பார்த்தேன். ஒரு போர்வைக்குள் இருவர். முழுவதுமாக போர்த்திக் கொண்டு பிண்ணிப்பிணைந்து இருந்தனர். முத்து சொன்னது உண்மை தான். சீட்டுக்குச் சென்று உட்கார்ந்தேன். இருப்பு பிடிபடவில்லை. ராத்திரி எல்லாமே நடந்திருக்குமா. முத்து பார்த்திருப்பானா என்றெல்லாம் யோசித்து விட்டு து£ங்கி போனேன். ஒரு சில நிமிடங்களில் நாங்கள் இறங்க வேண்டிய அவினாசி நிறுத்தம் வந்தது. இரண்டு பேரும் இறங்கி திருப்பூர் செல்ல டவுன் பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.
ராத்திரி பயணத்தை நினைத்துப் பார்த்தேன். இரண்டு ஜோடிகள் இரவு நடந்து கொண்ட விதம், முத்து இரவு முழுவதும் து£ங்காமல் அதை பார்த்துக் கொண்டிருந்தது போன்றவை நினைவிற்கு வந்தன. அப்போது தான் அந்த செல்போனில் மெசேஜ் கொடுத்த பெண் பற்றி யோசித்தேன். முத்துவிடம் கேட்டேன்.
“அப்புறம்... மெசேஜ் அனுப்புனுயே பதில் ஏதும் வரலியா?”
“எந்த மெசேஜ்?”
“அதாம்பா கவிதை டைப் செஞ்சு அனுப்பினியோ, அந்த பெண் வேற எதாவது மெசேஜ் அனுப்பினாளா?”
முத்து சிறிது தயங்கினான். கொஞ்சம் சிரித்துக் கொண்டே என்னை கேலியாக பார்த்தான்.
“அண்ணே நான் ராத்திரி மூணு பொண்ணுங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன். நீங்க எந்த பொண்ண கேட்குறீங்க?”
முத்து இப்படி சொன்னதை கேட்ட எனக்கு து£க்கி வாரிப்போட்டது. அடப்பாவி ஒரே நேரத்திலேயே மூன்று பெண்களுக்கு மெசேஜ் அனுப்புறானே படுபாவிப்பய.. என்று நினைத்துக் கொண்டேன். தகவல்தொடர்பு உச்சநிலையை அடைய செல்போன்களும் காரணம். செல்போன் என்பது முதன்முதலில் என் கைக்கு கிடைத்த போது நான் வேலையில் இருந்தேன். நாலு நண்பர்களிடம் மட்டுமே அதில் பேசுவேன். நான் படிக்கிற காலத்தில் செல்போன் என்றே ஒன்று இல்லை. அப்போது செல்போன் இருந்திருந்தால் எத்தனை பெண்களின் இதயங்களை நான் செல்போனில் சுழற்றி இருக்கலாம். முத்துவைப் போன்று மூன்று பெண்களுக்கு மட்டுமா ஒரே நேரத்தில் மெசேஜ் செய்திருப்பேன். முப்பது பெண்களுக்கு அல்லவா (!) செய்திருப்பேன். முத்துவை மிஞ்சியிருப்பேன். கவிதை சொல்லியிருப்பேன். இலக்கியம் பேசி இருப்பேன். பெண்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்பேன். விளக்கம் அளித்திருப்பேன். விளங்கியிருப்பேன்.
திருப்பூர் பஸ் நிலையம் வந்து விட்டது. கடந்து போன கனங்கள் திரும்ப வருவதில்லை. கணத்த இதயத்துடன் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கினேன்.
No comments:
Post a Comment